ஷங்கர் எப்போதும் வேலை, வேலை என்று இருப்பவர். அவர் படங்களில் மட்டும் தான் பெரும் கவனம் செலுத்தி வருவார்.
அதேநேரம் தனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு படத்தை பார்த்து தனக்கு பிடித்திருந்தால் புகழ்ந்து தள்ளிவிடுவார்.
அப்படித்தான் சமீபத்தில் ஷங்கர் கோலமாவு கோகிலா படத்தை பார்த்து அசந்துள்ளார், தனக்கு படம் மிகவும் பிடித்ததாகவும், அனிருத் இசையில் கலக்கி விட்டார் என்றும் கூறியுள்ளார்.
மேலும், நயன்தாராவை புகழ்ந்துவிட்டு, இது ஒரு ‘குடும்ப-கிரேம்-ட்ராமா’என்று குறிப்பிட்டுள்ளார், இவை படக்குழுவினர்களுக்கு செம்ம உற்சாகத்தை கொடுத்துள்ளது.
https://twitter.com/shankarshanmugh/status/1031217402392924160