ஷாலினி பிறந்தநாளில் அஜித், விஜய் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

221

அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, விஜய் ரசிகர்களுக்கும் இன்று ஒரு மகிழ்ச்சியான நாளே. ஷாலினியுடன் விஜய், கண்ணுக்குள் நிலவு, காதலுக்கு மரியாதை என இருபடங்களில் நடித்துள்ளார்.

அஜித், விஜய் இருவருக்குமே பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அதே போல ஷாலினிக்கு ரசிகர்கள், பெண் ரசிகைகள், குடும்ப பெண்கள் என தனியே பலர் இருக்கிறார்கள்.

இது இப்போது சேர்ந்த கூட்டம் அல்ல. அப்போதே உருவான கூட்டம். இந்த நாளில் அஜித், விஜய் என இருரசிகர்களையும் மையமாக கொண்டு உருவாக இருக்கிறது புதிய படமான விசிறி.

சரவணன் மீனாட்சி புகழ் செந்தில், சென்னை 28 புகழ் விஜய லட்சுமி நடித்த வெண்ணிலா வீடு படத்தை இயக்கிய வெற்றி மகாலிங்கம் தான் இப்படத்தையும் இயக்குகிறார்.

அப்படத்தின் அனைத்து பாடல்களுக்கும் இசையமைத்தவர் தன்ராஜ் மாணிக்கம். மேலும் அவர் ஜானி ஜானி வா மாமா என ஃபிரண்டஸ் புக் பாடலை கானா பாலாவுடன் பாடியிருந்தார்.

இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது விசிறி படத்திற்கு அவரே இசையமைக்கிறாராம். இயக்குனருக்கு நன்றி தெரிவித்து இதை அவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

SHARE