ஷூட் தி குருவி பாடலின் வெற்றிக்கு அனிருத் தான் காரணம்

305

ஜில் ஜங் ஜக் என்ற படம் வருகிற டிசம்பர் 25ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்க பல புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

மேலும் சமீபத்தில் வெளியான டீசர் மற்றும் 2 பாடல்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது. அதுவும் ஷூட் தி குருவி (Shoot The Kuruvi) பாடல் ரசிகர்களின் ரிங்டோனாய் வைத்துள்ளனர். இந்த பாட்டின் வெற்றிக்கு என்ன காரணம் என்றுஇசையமைப்பாளர் விஷால் சமீபத்தில் ஒரு வார இதழில் பகிர்ந்துள்ளார்.

அதாவது சூதுகவ்வும், ஆரண்யகாண்டம் ரெண்டு படமும் கலந்த கலவையா இந்தப்படம் பாடல் வித்தியாசமா இருக்கணும்னு யோசிச்சோம்.

அதனால பாட்டு வரிகளை காமெடியா எழுதிவாங்கினோம். ஆனா விஷூவல் ரொம்ப சீரியஸா இருக்கும். அனிருத்தோட டெடிக்கேஷன் தான் முக்கியமான காரணம். ஆனாலும் ரெக்கார்டிங் தியேட்டருக்குள் வந்தாலே செம ஜாலியா இருக்கும்.

10 நிமிடம் சீரியஸா பாடுவாரு. அடுத்து 2 நிமிடம் ரெஸ்ட். ஜாலியா பேசிட்டு கலாய்ச்சிட்டு இருப்பாரு. மறுபடியும் 10 நிமிஷம் பாடுவாரு, 2 நிமிஷம் ரெஸ்ட். இப்படியே தான் முழு பாடலும் ரெடி பண்ணோம் என்றார்.

SHARE