ஷேன் வார்னே தெரிவு செய்த சிறந்த இந்திய டெஸ்ட் அணி

309

இந்தியாவின் சிறந்த டெஸ்ட் அணியை அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே இன்று தெரிவித்துள்ளார்.

இரண்டு முச்சதம் அடித்த ஷேவாக் மற்றும் நவ்ஜோத் சித்தை தொடக்க வீரர்களாக தெரிவு செய்துள்ளார்.

இந்திய அணியின் தடுப்புச்சுவர் ராகுல் டிராவிட்டுக்கு வழக்கமான 3வது இடத்தை வழங்கியுள்ளார்.

அதே போல் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சினுக்கு 4வது இடத்தை வழங்கியுள்ளார்.

6வது இடத்திற்கு யாரை தெரிவு செய்வது என்பதில் தனக்கு அதிகம் சிரமம் ஏற்பட்டதாக கூறியுள்ளார். அந்த இடத்திற்கு அசாருதீனை தெரிவு செய்துள்ளார்.

சுழற்பந்தில் கும்ப்ளேவையும், ஹர்பஜன் சிங்கையும், வேகப்பந்து வீச்சில் ஜவகல் ஸ்ரீநாத்தை தெரிவு செய்துள்ளார். லஷ்மணை 12வது நபராக இணைந்துள்ளார்.

வார்னேவின் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்:-

1. வீரேந்திர சேவாக், 2. நவ்ஜோத் சிங் சித்து 3. ராகுல் டிராவிட், 4. சச்சின் டெண்டுல்கர், 5. சவுரவ் கங்குலி, 6. அசாருதீன், 7. கபில்தேவ், 8. மகேந்திர சிங் டோனி, 9. அனில் கும்ப்ளே, 10. ஹர்பஜன் சிங், 11. ஜவகல் ஸ்ரீநாத், 12. லஷ்மண்

SHARE