ஷேவாக்கின் அதிவேக இரட்டைசதம் சாதனையை முறியடித்த பென் ஸ்டோக்ஸ்

341
தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இரட்டைசதம் அடித்த பென் ஸ்டோக்ஸ் ஷேவாக்கின் சாதனையை முறியடித்துள்ளார்.தென்ஆப்பி்ரிக்கா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கேப்டவுனில் நடந்து வருகிறது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 87 ஓவருக்கு 5 விக்கெட் இழப்பிற்கு 317 ஓட்டங்கள் எடுத்தது.

பென் ஸ்டோக்ஸ் (74) அரைசதமும், பேர்ஸ்டோவ் 39 ஓட்டங்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

நேற்று தொடர்ந்து விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 105 பந்தில் 100 ஓட்டங்களை எடுத்தார்

அதன்பின் அவரது ஆட்டத்தில் அனல் பறந்தது. தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்களின் பந்தை நாலாபுறமும் விளாசி தள்ளினார்.

இதனால் அடுத்த 100 ஓட்டங்களை 63 பந்தில் கடந்தார். இதனால் அதிகவேகமாக இரட்டை சதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இதற்கு முன் இலங்கைக்கு எதிராக ஷேவாக் 168 பந்தில் இரட்டை சதம் அடித்து இருந்தார்.

இதை பென் ஸ்டோக்ஸ் 163 பந்தில் முந்தினார். அவர் 198 பந்தில் 30 பவுண்டரி, 11 சிக்சர் என 258 ஓட்டங்கள் குவித்தார்.

நியூசிலாந்து அணியின் நாதன் ஆஸ்லே 153 பந்தில் இரட்டை சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.

SHARE