ஸ்கெட்ச் படத்தின் ரிலிஸ் தேதி வெளிவந்தது, இதோ

216

விக்ரம் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஸ்கெட்ச். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ள படம்.

ஏனெனில் விக்ரம் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு பக்கா கமர்ஷியல் படத்தில் நடித்து வருகின்றார், இதில் விக்ரமிற்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.

இப்படம் கிறிஸ்துமஸ் விருந்தாக திரைக்கு வரவுள்ளதாக கூறியுள்ளனர், மேலும், ஜெமினி படத்தில் எப்படி ஒரு விக்ரமை பார்த்தோமோ, அதேபோல் தான் இதிலும் செம்ம லோக்கலாக விக்ரம் மிரட்டியுள்ளாராம்.

இப்படத்தின் டீசர் வரும் தீபாவளி விருந்தாக வெளிவரும் என இயக்குனர் விஜய் சந்தர் கூறியுள்ளார்.

SHARE