
பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்ட போதிலும் ஸ்கொட்லாந்து காவல்துறையினர் இலங்கைக் காவல்துறையினருக்கு தொடர்ந்தும் பயிற்சி வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் காவல்துறையினர் சித்திரவதைகளில் ஈடுபடுகின்றமை குறித்த புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையிலும், ஸ்கொட்லாந்து காவல்துறையினர் இந்த பயிற்சியை வழங்கத் தீர்மானித்துள்ளனர்.
இலங்கைக் காவல்துறையினருக்கு பயிற்சி அளிப்பது குறித்து ஸ்கொட்லாந்துடன் செய்து கொண்ட உடன்படிக்கை இந்த மார்ச் மாதத்துடன் கலாவதியாகியிருந்தது.
எனினும், தொடர்ந்தும் இலங்கைக் காவல்துறையினருக்கு பயிற்சிகளை வழங்க ஸ்கொட்லாந்து காவல்துறையினர் தீர்மானித்துள்ளனர். இலங்கையில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறு பயிற்சிகளை வழங்குவதாக ஸ்கொட்லாந்து அறிவித்துள்ளது.
புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னரும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் சித்திரவதைகள் இடம்பெற்று வருவதாக சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
இவ்வாறான ஓர் பின்னணியில் ஸ்கொட்லாந்து காவல்துறையினர் இலங்கைக்கு பயிற்சிகளை வழங்க எடுத்தத் தீர்மானம் பல்வேறு வழிகளில் விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.