மெக்ஸிகோவின் மாண்ட்ரெ நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பைன் முகுருஸா சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டுள்ளார்.
டிபிள்யுடிஏ போட்டியான இதன் இறுதிச் சுற்றில் முகுருஸா-உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனை விக்டோரியா அசரென்கா மோதினர்.
இதில் 6-1, 3-1 என முகுருஸா முன்னிலை பெற்றிருந்த நிலையில் அசரென்கா காயத்தால் பாதிக்கப்பட்டு வெளியேறினார்.
இதனையடுத்தே முகுருஸா சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டார்.