ஸ்மார்ட்போனால் உயிர் காப்பற்றப்பட்ட நபர். உண்மை சம்பவம்!

237

ஸ்மார்ட்போன் நபர் ஒருவரின் உயிரை காப்பாற்றியது என கூறினால் நம்பமுடிகின்றதா?

இவ்வளவு காலமும் திரைப்படங்களில் மட்டுமே இவ்வாறான விடயங்களை கண்டுகளித்த பலர் இதை நிஜத்திலும் அவதானித்துள்ளனர்.

5 பிள்ளைகளின் தந்தையான சிராஜ் அப்ராமிஸ் என்பவரது உயிரே இவ்வாறுகாப்பாற்றப்பட்டுள்ளது.

கடந்த வாரம் தென் அமெரிக்காவின் கேப் டவுனில் வைத்து இவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது இவரது நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கிச் சூடுபதிந்துள்ளது.

எனினும் இவர் அணிந்திருந்த ஜெக்கட்டின் பொக்கட்டில் இருந்த ஸ்மார்ட் போன் மீதேதுப்பாக்கிச் சூடு பட்டுள்ளதால் இவரது உயிருக்கு எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த கையடக்கத் தொலைபேசியால் இனி பயனில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE