
சாம்சங் நிறுவனத்தால் புத்தம் புதிய வடிவமைப்புகளுடன் சாம்சங் கேலக்ஸி ஏ6 (Samsung Galaxy A6)ஸ்மார்ட்போன் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. மூன்று வண்ணங்களில் வெளியான இந்த ஸ்மார்ட்போன் 32 ஜிபி நினைவக திறன் கொண்டது.
செல்பிகள் பிரபலமாகவுள்ள இந்த காலக்கட்டத்துக் கேற்ப முன்பக்கத்தில் 16 மெகா பிக்சல் கேமராவும், பின்பக்கத்தில் 16 மெகா பிக்சல் கேமராவும் உள்ளன. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 5.6 இன்ச் தொடுதிரையை கொண்டிருக்கிறது.
32 ஜிபி நினைவக திறன் கொண்ட கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போன் 21,990 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த விலையில் ரூ.2,000 குறைக்கப்பட்டு 19,990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அதேபோல, அடுத்து அறிமுகமாக உள்ள 64 ஜிபி நினைவக திறன் கொண்ட ஏ6 ஸ்மாட்போனின் விலையில் 2,000 ரூபாய் குறைக்கப்பட்டு, ரூ.20,990-க்கு விற்கப்படவுள்ளது. இந்த ரக ஸ்மாட்போனின் விற்பனை, இன்னும் இந்தியாவில் தொடங்கப்படவில்லை.