ஸ்ரீதேவியின் மரணம் இருக்கட்டும்! இத பாத்தீங்களா? கொந்தளித்த நடிகர் பிரசன்னா

204

நடிகை ஸ்ரீதேவி இறந்தது தான் தற்போது பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் விசயம். இந்நிலையில் பலரின் பார்வைகளும் இந்த பக்கம் தான் இருக்கிறது.

இந்நிலையில் தற்போது அதிர்ச்சியான வேறு சில சம்பவங்களும் நடந்தது. இதில் கடந்த சனிக்கிழமை விழுப்புரம் கோவிலூரில் ஆராயி என்வரின் மகள் தனம், மகன் சமயன் ஆகியோர் வீட்டில் தூங்கிகொண்டிருந்தனர். இரவில் அடையாளம் தெரியாதவர்களால் அடித்து வெட்டி காயப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் அந்த சிறுவன் சமயன் உயிரிழந்தான். ஆராயி மற்றும் அவரின் மகள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரிக்கையில் நிலத்தகராறும், இரவு நேரத்தில் அந்த சிறுமி தனம் என்பவளிடம் அந்த மர்மநபர்கள் தவறாக நடந்து கொள்ள முயற்சித்த போது நடந்த பிரச்சனை என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் நடிகர் பிரசன்னா தன் ட்விட்டரில் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

SHARE