ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு 12 கோடி ரூபா பாக்கி வைத்த மகிந்த ராஜபக்ச அரசு

344
மகிந்த ராஜபக்ச உட்பட கடந்த அரசாங்கத்தினால், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுத்திற்கு செலுத்த வேண்டிய 12 கோடி ரூபாவை செலுத்தாது அதனை புறக்கணித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
Nalin-Bandara

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ச பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக என்று கூறி தான் நினைத்தாற் போல் விமானங்களை பயன்படுத்தியுள்ளார். இதற்காக விமான நிறுத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை.

அத்துடன் ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்கள் பல்வேறு விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் விமல் வீரவன்ஸ மீதும் விமானப் பயணச்சீட்டு தொடர்பில் குற்றச்சாட்டு இருப்பதாகவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச தன் மீது அவதூறு குற்றச்சாட்டு சுமத்துவதாக கூறி 200 கோடி ரூபாவை இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்ய போவதாக அச்சுறுத்திய போதிலும் அது தொடர்பான சட்டத்தரணியின் கடிதம் இதுவரை கிடைக்கவில்லை. அவரது சட்டத்தரணியின் கடிதம் கிடைக்கும் வரை காத்திருப்பதாகவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

SHARE