ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி படுதோல்வியடையும் எச்சரிக்கின்றார் மஹிந்த ராஜபக்ஸ:-

309

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி படுதோல்வியடையும் என முன்னாள் ஜனாதிபதியும் கட்சியன் முன்னாள் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அம்பலந்தொட்டை ரீதிகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகள் இன்ற தனித்து போட்டியிட்டால், சுதந்திரக் கட்சி படுதோல்வி  அடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிடக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர் என்ற ரீதியில் தாம் நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி விடுமாறு சிலர் கோரி வருவதாகவும் சில தொடர்ந்தும் நீடிக்குமாறும் கோரி வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும், ஐக்கிய தேசியக் கட்சியினதும் பொதுவான எதிரியாக தாம் மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்

SHARE