தேசிய அரசாங்கத்திற்கு ஒரு ஆண்டு பூர்த்தியான பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கூட்டாக ஆட்சி செய்யும் வகையில் மற்றுமொரு உடன்படிக்கையை கைச்சாத்திட உள்ளதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அரசாங்கத்தின் உண்மையான பங்காளி இல்லை என சிலர் முன்னெடுத்து வரும் பொய் பிரச்சாரத்திற்கு இந்த புதிய உடன்படிக்கை மூலம் பதில் கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இருக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போது அரசாங்கத்தில் இணைந்து கொள்வார்கள்.
கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரையில் கலந்து கொள்ளாததன் மூலம் அவர்கள் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் கூட்டு அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்தும் இருப்பார் எனவும் துமிந்த திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.