கூட்டு எதிர்கட்சியின் பாதயாத்திரை இறுதி நிகழ்வின் போது கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்திற்கு முன்பாக அநாகரிகமாகவும் ஜனாதிபதியை விமர்சிக்கும் வகையிலும் நடந்துக்கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கட்சியின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் போது முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கூட்டுஎதிர்கட்சியினால் நேற்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகசந்திப்பில் கலந்துக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கமகே குறித்த சம்பவம் தொடர்பில் கவலையடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தமது பாதயாத்திரை குழுவினர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் வெளியில் இருந்து வந்த நபர்களே கட்சியை அவமதிக்கும் வகையில் நடந்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.