தமிழினத்திற்கு எதிராக ஸ்ரீ லங்கா மேலாதிக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போரின் போது நடைபெற்ற மானிடத்திற்கெதிரான குற்றங்கள் , இனப்படுகொலைக்கு நீதிவேண்டி தமிழ் மக்கள் போராடி வருகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு ஸ்ரீ லங்காவின் ஒத்துழைப்புடன் ஐ நா மனித உரிமை சபையில் கொண்டுவரப்பட்ட 30/1 மற்றும் 34/1 ஆகிய தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை 2017ல் பெற்றுக்கொண்ட கால நீடிப்பிலும் கூட ஸ்ரீ லங்கா இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. ஒவ்வொரு கூட்டத்தொடரிற்கும் முன்பாக ஒவ்வொரு விடயத்தை கண் துடைப்பிற்காக செய்து வருகின்றது.


இந்த நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 2019ம் ஆண்டு நடக்கவிருக்கும் ஐ நா மினித உரிமை சபை கூட்டத்தொடரில் இலங்கையை ICCக்கு பரிந்துரை செய்யக்கோரி பிரித்தானிய எம்பிக்களிடம் தொடர் சந்திப்புக்களில் ஈடு பட்டு வருகின்றது அந்த வகையில் நேற்றைய தினம் HORNSEY and WOOD GREEN தொகுதி எம்பி WEST CATHERINE க்கும்
நா.க .த. அரசுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
காலை 11 மணிக்கு நா.க.த.அரசின் விளையாட்டு மற்றும் சமுக நலன் பிரதியமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் நெறிப்படுத்தலில் ஊடக செயற்பாட்டாளர் யதுர்சன் சொர்ணலிங்கம் ஒருங்கிணைப்பில் ஆரம்பமாகிய இந்த சந்திப்பில் மனித உரிமைகள் அமைச்சர் பத்மநாபன் மணிவண்ணன், செயற்பாட்டாளரகளான
நுஜிதன் இராசேந்திரம், பொன்ராசா புவலோஜன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளதுடன் தற்போது தாயகத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ,தமிழர் பகுதிகளில் திட்டமிட்டு நடை பெற்று வரும் தொழில்முறைசார் வலிந்த குடியேற்றங்கள் உட்பட பல பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் பிரிட்ன் ஶ்ரீ லங்காவை ICC க்கு பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டதுடன் தற்போது ஐ நா மனித உரிமை பேரவையால் கொண்டுவரப்பட் தீர்மானங்கள் முன்னேற்றமடைந்துள்ளதா என ஆராயப்பட்டு அது தொடர்பிலான TGTE MAP அறிக்கையும் கையளிக்கப்பட்டது. இறுதியில் இலங்கையை ICC க்கு கொண்டு செல்வதற்கு தான் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தாயகத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக பிரிட்டன் பாராளுமன்றில் பேசுவதாகவும் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.