ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகி, வீ.ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொள்ள போவதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
எமது செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இதனை உறுதிப்படுத்தினார்.
இந்த புதிய இணைவு தொடர்பில் எதிர்வரும் 14 ஆம் திகதி செய்தியாளர் சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,
இந்தநிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிக் கொள்வதற்கான அறிவித்தல் கடிதத்தை அடுத்த மாதம் முதல் வாரத்தில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அவரிடம் எமது செய்திச் சேவை பெற்றுக்கொண்ட மேலதிக தகவல்கள் அடங்கிய முக்கிய செவ்வியை இன்று மாலை சூரியனின் பிரதான செய்தியில் கேட்கலாம்.
இதேவேளை, விநாயகமூர்த்தி முரளிதரனின் இணைவு தொடர்பில் எமது செய்திப் பிரிவு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியை தொடர்பு கொண்டு வினவியது.
இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான கூட்டணி ஒன்றை உருவாக்கவிருப்பதாகவும், இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் உள்ளிட்ட பலத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் ஆனந்தசங்கரி, தெரிவித்தார்.
இது குறித்து விநாயகமூர்த்தி முரளிதரனுடனும் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறினார்.