ஸ்ருதிஹாசனுடன் கூட்டணி சேர்ந்த நடிகைகள்

134

சமீபகாலமாக ஸ்ருதிஹாசன் மீது ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவரின் உடை தான் என்று காரணம் என்று சிலர் விமர்சிக்கின்றனர்.

மேலும் ஒரு சில தெலுங்கு சினிமா படங்களில் பாடலுக்கு மட்டும் அவர் ஆடிய நடனம் என்று மற்றவர்கள் சொல்லிவரும் நிலையில் தெலுங்கில் வெளியான ப்ரேமம் படத்திற்காகவும் அவரை விமர்சித்தனர்.

சமீபத்தில் சுருதி வெளியிட்ட “பிட்ச்” என்ற குறும்படத்திற்கும் இந்த சர்ச்சை தொடந்தது. ஆனால் ஸ்ருதியை பொறுத்தவரை தன் மனதில் எதை நினைத்தாலும் அதை தயக்கமில்லாமல் அப்படியே தைரியமாக சொல்பவர்.

சிலர் இது குறித்து அதிர்ச்சியடைந்தாலும் தனக்கு பட்டதை சரி என செய்து வருகிறார் அவர்.

இந்நிலையில் ஸ்ருதி ஹாசனின் இந்த குறும்படத்தை பார்த்த திரிஷா, தமன்னா மற்றும் ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் அவரின் தைரியத்தை வாழ்த்தி ஊக்கப்படுத்தியுள்ளனர்.

SHARE