ஹட்டனில் இன்று பொலிஸ் நடமாடும் சேவை

285

 

ஹட்டன் தலைமையக பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடமாடும் சேவையொன்று இன்று (10) காலை முதல் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.

இந்த நடமாடும் சேவையில் பொலிஸ் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளல், முறைப்பாட்டு பதிவுகளை பெற்றுக்கொடுத்தல், அடையாள அட்டைக்கான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளல் மற்றும் பெற்றுக்கொடுத்தல், அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை நிரப்புதல்,
பதிவுகளை பெற்றுக்கொள்ளல், பிறப்பு அத்தாட்சி பத்திரத்திற்கான பதிவுகளை மேற்கொள்ளல், வைத்திய முகாம் போன்ற பல்வேறு சேவைகள் இங்கு பெற்றுக் கொடுக்கப்பட்டன.

இந்த பகுதியில் உள்ள பெருமளவிலான தோட்டப்புற மக்கள்  குறித்த  நடமாடும் சேவையில் பங்குபற்றியிருந்தனர்.

தமது வேலையை விட்டு மிக நீண்ட தூரம் சென்று பெற்றுக்கொள்ள வேண்டிய சேவைகளை மக்கள் தமது ஊரிலேயே பெற்றுக்கொள்ள கிடைத்தமையிட்டு மிக திருப்தியடைந்ததுடன் இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கு தமது நன்றிகளையும் தெரிவித்தனர்.

SHARE