ஹட்டனில் லொறி விபத்து: படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில்

277

ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில், டிக்கோயா அலுத்கால பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்

குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான பெண் டிக்கோயா – கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹட்டனிலிருந்து டிக்கோயா பகுதியை நோக்கி வேகமாக சென்ற குறித்த சிறிய ரக லொறி அலுத்கால பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போதே, பேருந்திற்காக நின்றுக் கொண்டிருந்த குறித்த பெண் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

குறித்த லொறி வேகமாக சென்றதனாலேயே தான்  இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE