ஹட்டன் பகுதியில் மண்சரிவு

293

ஹட்டன் – சமனலகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 12 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சமனலகம பகுதியில் இன்று முற்பகல் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடங்களை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சமனலகம பகுதிக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் கூறினார்.

சமனலகம பகுதியில் ஏற்கனவே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும், அதே பகுதியில் இன்று மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

SHARE