ஹட்டன் வெலிஓயா புதுக்காடு 50 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டல்

167
(நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்  மு.இராமச்சந்திரன்) 
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் மூலம் ஹட்டன் வெலிஓயா புதுக்காடு தோட்டத்தில் அமைக்கப்படவுள்ள 50 வீடுகளுக்கான  அடிக்கல் நாட்டும் ஆரம்ப நிகழ்வு 04-06-2018 ஆம் திகதியன்று இடம்பெற்றது.
  
 இந்நிகழ்வில் கண்டி இந்திய உதவித் தூதுவர் திரேந்திரசிங், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம. திலகராஜ், இந்திய தூதரகத்தின் இரண்டாம் நிலை செயலாளர் ரமேஸ் ஐயர், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சிங். பொன்னையா, சோ. ஸ்ரீதரன், மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் புத்திரசிகாமணி உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டார்கள்.
SHARE