ஹப்புதளை – பிளக்வூட் பகுதியில் வாகன விபத்து! மூவர் படுகாயம்

314

 

ஹப்புதளை – பிளக்வூட்  பகுதியில்  இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் கார் ஒன்று  300 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக  அவர் குறிப்பிட்டார்.

கொழும்பிலிருந்து பண்டாரவளை நோக்கி  வந்த கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாயிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்கள் ஹப்புதளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதேவேளை இவ்விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை  ஹப்புதளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE