கடந்த 16ஆம் திகதி வவுனியா உக்குலாங்குளப் பகுதியில் ஹரிஷ்ணவி என்கிற மாணவி தூக்கிலிடப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட அவர் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் எனத்தெரிய வந்தநிலையில், பல்வேறான செய்திகள் திரிபுபடுத்தப்பட்ட நிலையில் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இச்சம்பவத்தின் உண்மைத்தன்மை குறித்து தினப்புயல் பத்திரிகை ஆராய்ந்தபோது, இக்கொலைச் சம்பவம் தொடர்பில் ஹரிஷ்ணவியின் தாயாரான மாதினி கெங்காதரன் தெரிவிக்கையில், நான் காலையில் பாடசாலைக்கு செல்வதற்கு முன்னர் எனது மகளின் காலை உணவிற்காக சுசியத்தினை தயார் செய்து வைத்தேன். நான் செல்வதற்கு முன்பதாகவே எனது மகள் அதனை உண்டார். மதிய உணவையும் தயார்படுத்திவிட்டே நான் பாடசாலைக்குச்செல்வது வழக்கம். இவ்வாறிருக்கும்போது சம்பவ தினத்தன்று எனது மகள் என்னிடம் அம்மா உணவைத் தரவா? தண்ணீர் எடுத்துவைத்துள்ளீர்களா? எனக்கேட்டார். நல்ல மனதுடனே என்னை பாடசாலைக்கு வழியனுப்பினார். நீ ஏன் இன்று பாடசாலைக்கு வரவில்லை எனக்கேட்டபோது, வெள்ளை சீருடை அழுக்காகியிருக்கிறது. ஆகவே நான் இன்று வரவில்லை என்ற காரணத்தையே மகள் என்னிடம் தெரிவித்தார். அதன் பின்னர் நான் வவுனியா விபுலானாந்தா பாடசாலையில் கற்பிப்பதனால் அங்கு சென்றுவிட்டேன்.
பாடசாலை சென்ற அந்தநேர இடைவெளி யில் நீங்கள் வீட்டில் இருக்கும் உங்கள் மக ளுடன் தொடர்பினை மேற்கொண்டீர்களா? இதற்கு இல்லை எனக்கூறிய தாய், மகள் வீட்டில் தனிமையில் தான் உள்ளார் என்ற விடயம் பற்றி யாரிடமாவது தெரிவித்திருந்தீர்களா? என வினவிய போது, இல்லை எனக்கூறிய அவர் நீங்கள் பாடசாலைக்குச் செல்லும்போது காணியின் வெளிக்கதவினை எவ்வாறு பூட்டியிருந்தீர்கள்? இதற்கு நான் கத வினை பூட்டினால் பூட்டிச்செல்லவில்லை எனக்கூறினார். அருகில் இருக்கும் சைக்கிள் சேர்விஸ் கடையின் உரி மையாளர் பாலசிங்கம் ஜனார்தனிடம் மகளைப் பார்த்துக்கொள்ளுமாறு கூறினீர்களா? என வினவியபோது, இல்லை எனக்கூறிய தாயார் நான் பாட சாலை முடித்து வீட்டிற்கு வந்து எனது மகளை அழைத்தேன். வெளிக்கதவு நான் பூட்டியதைப்போன்றே இருந்தது. முதலில் எனது மகன் தான் வீட்டிற்கு வந்து சகோதரியைப் பயமுறுத்துவோம் எனக்கூறி வீட்டிற்குள் பார்த்தான். அவர்தான் என்னிடம் அக்கா கட்டிலின் மேலே தொங்கிக்கொண்டிருக்கின்றார் எனக்கூறினார். அப்போது நான் உடனே வந்து அறையைப் பார்த்தபோது எனது மகள் தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டார். என்னைப் பய முறுத்துவதற்காகத்தான் இவ்வாறு செய்கின்றாரா? எனப் பார்த்தேன். உடனே மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல முற்பட்டேன். எனது மகள் இறந்துவிட்டாள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. தூக்கிலிடப்பட்டிருந்த சமயம் எனது மகள் காற்சட்டை ஒன்றினையே அணிந்திருந்தார். அது சற்று விலகியிருந்தது. சற்று விலகிய நிலை யில் உள்ளாடை காணப்பட்டது. உடனேயே நான் அந்த சுருக்குப் போடப்பட்டிருந்த சீலையினை அவிழ்த்து கட்டிலில் படுக்கவைத்து சாம்பல் நிற நீளக்காற்சட்டையினை அணிவித்தேன். வேறு எதுவும் அவரது உடலில் நான் மாற்றங்களைச் செய்யவில்லை. அருகிலிருந்த மருத்துவரை நாடினேன். அவர் வந்து பார்வையிட்டு பிள்ளை இறந்துவிட்டதாகக் கூறினார்.
அதன் பின்னர் அன்றைய தினம் இரவு 7.45மணியளவில் திடீர் மரண விசாரணை அதிகாரியான சிவநாதன் கிஷோர் அவர்கள் எமது வீட்டிற்கு பொலிஸ் சகிதம் வருகை தந்து விசார ணைகளை முன்னெடுத்தார். அவர் என்னிடம், மகளுக்கு காதல் விவகாரங்கள்; ஏதாவது இருக்கிறதா? யாரையாவது சந்தேகிக்கின்றீர்களா? பாடசாலை சீருடைப்பிரச்சினைக்காக உங்களது மகள் தூக்கில் தொங்கினாரா? பொய் சொல்லவேண்டாம். உண்மையைக் கூறுங்கள் என்றார். எனது மகளுக்கு இவ்வாறான காதல் விவகாரங்கள் எதுவும் இல்லை என்றே கூறினேன். அவ்வாறானவள் அவள் இல்லை. மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களையே நான் மரண விசாரணை அதிகாரிக்குத் தெரிவித்தேன். அதன் பின்னர் எமது மகளை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றுவிட்டார்கள். ”மருத்து வர்களின் அறிக்கையின்படி எனது மகள் கையடக்கத் தொலைபேசியின் சார்ஜ் செய்யப்படும் வயரினால் கழுத்து நெறிக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களின் மூலமே கொலை செய்யப்பட்டிருக்கின்றார்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
மரண விசாரணை அதிகாரி ஒருசில விடயங்களை ஒத்துக்கொள்ளச் சொல்லிய அடிப்படையில் நான் ஒத்துக்கொண்டேன். காரணம் எனது மகளின் உடலை என்னிடம் இவர்கள் ஒப்படைக்கவேண்டும் என்பதற்காகவே. அதன் பின்னர் எனது மகளுடைய மரண சடங்குகள் நிறைவடைந்திருந்தது. இதற்கிடையில் ஊடகங்கள் பலவும் பல்வேறான கோணங்களில் செய்திகளை பிரசுரிக்க ஆரம்பித்துவிட்டன.
எனக்கும் சேர்விஸ் கடையின் உரிமையாளருக்கும் 10 வருடங்களாக நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகவும் இவ்விவகாரங்கள் எனது மகளுக்குத் தெரியவந்ததன் அடிப்படையிலேயே மகள் கடை உரிமையாளர் ஜனார்தனினால் கொலை செய்யப்பட்டிருக்கலாம்.
நானும் எனது பிள்ளைகளும் வெளிநாடு செல்ல முற்பட்டவேளை அதனை விரும்பாத சைக்கிள் கடையின் உரி மையாளர் எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, எமது கடவுச்சீட்டு மற்றும் வீசாக்களை கிழித்தெறிந்துவிட்டதாகவும் நான் வெளிநாடு சென்றால் இவருக்கான சலுகைகள் நிறுத்தப்படும் என்பதான செய்திகளும், அத்தோடு அந்த சேவிஸ் கடையினை எனது செலவில்தான் அமைத்துக்கொடுத்ததாகவும், எனது கணவர் வெளிநாட்டில் இருப்பதன் காரணமாக இவரையே உதவிக்குப் பயன்படுத்திக்கொண்டதாகவும் இதன டிப்படையில் சேர்விஸ் கடையின் உரி மையாளரின் மனைவி கோபமடைந்து இன்னொருவரை வைத்து எனது மகளை கொலை செய்திருக்கக்கூடும் என்றும் அல்லது மனைவி கூறி ஜனார்தன் எனது மகளை கொலை செய்திருக்கக்கூடும் என்றும் மொத்தத்தில் எனது நடத்தை சரியில்லை என்றும் கிராமத்துக்குள் எனது குடும்பம் மற்றும் என்னைப் பற்றியதான சிறந்த அபிப்பிராயங்கள் இல்லை எனவும் எனது சுயதேவைக்காக ஜனார்தனைப் பயன்படுத்தியதாகவும் ஆகவே இவர்தான் இந்தக் கொலை யினைச் செய்திருக்கின்றார் என்ற அடிப்படையில் பொலிஸார் அவரைக் கைதுசெய்திருக்கின்றார்கள்.
இது இவ்வாறிருக்க பாலசிங்கம் ஜனார்தன் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரினால் சிவன்கோயிலுக்கு அருகாமையில் உள்ள வீதியில் வைத்து கைதுசெய்யப்பட்டிருக்கின்றார். பொலி ஸாரிடம் நான் சைக்கிள் சேர்விஸ் கடை உரிமையாளர் மீது எனக்குச் சந்தேகம் இருக்கிறது. காரணம் இவர் பக்கத்தில் இருக்கிறார். எனது மகள் ஏதாவது சத்தம் எழுப்பியிருந்தால் இவருக்குத் தெரி யாமல் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. இவர் இக்கொலையினை செய்யாவிட்டாலும் வேறு ஒருவரைக் கொண்டு இக்கொலையினை செய்திருக்கலாம் எனவும் நான் சந்தேகிக்கின்றேன் எனக்கூறியதன் நிமித்தம் பொலிஸார் இவரைக் கைதுசெய்தனர்.
சைக்கிள் கடை ஜனார்தனுடன் நீங்கள் குறிப்பிட்ட காலங்களில் கதைத்திருக்கின்றீர்களா? என வினவிய போது, இல்லை எனக்கூறிய மாதினி, ஜனார்தன் நல்லவர் எனவும் அவரது மனைவியே மிகக்கொடூரமானவர் எனவும் கூறினார்.
இவ்வாறு கூறுவதன் ஊடாக நீங்கள் ஜனார்தனைக் காப்பாற்ற முயல்கிறீர்களா? எனக்கேட்டபோது, என்னோடு அவர் சண்டை பிடிப்பதில்லை பதிலாக அவரது மனைவியே சண்டை பிடிப்பார். அப்போது அவரது கணவர் ஜனார்தன் சத்தம் போடவேண்டாம் என அவரைக் கூறினா லும் கூட அவர் கேட்கமாட்டார்.
உங்களது மகளைக் கொலை செய்யும் அளவிற்கு ஜனார்தனின் மனைவி உங்களிடம் என்ன வாக்குவாதப்பட்டார் என வினவ, நீங்கள் வெளிநாட்டுக்குப் போவதை நான் பார்க்கின்றேன். எனக்கு கடன் தரவேண்டும். அவ்வாறு தராவிட்டால் என்ன செய்கிறேன் பார் என்றெல்லாம் சவால் விட்டிருந்தார். ஏற்கனவே எட்டு மாதங்களுக்கு முன்னர் வேலிப் பிரச்சினை இருந்தது. பின்னர் நாம் தான் அதனை அடைத்தோம்.
இதற்கு முன்னர் இவர்கள் உங்களுடன் பிரச்சினைப் படவில்லையா? எனக் கேட்டபோது, அவ்வாறில்லை என்றார்.
உங்களது மகன் சேவிஸ் கடை உரிமையாளரை(ஜனார்தன்) ரகு மாமா என அழைப்பாரா? அப்படி அழைப்பதில்லை அதற்கான தேவையும் இல்லை.
அப்படியாயின் ஜனார்தனின் மனைவி தான் அடியாட்களைக்கொண்டு உங்களது மகளைக் கொலை செய்திருக்கலாம் என நினைக்கிறீர்களா? அப்படியும் நடந்திருக்கலாம் எனக் கூறிய ஹரிஷ்ணவியின் தாயார் இன்னும் பல விடயங்களைக் கூறினார்.
உங்களுடைய கணவர் இயக்கங்களுடன் சம்பந்தப்பட்டவரா? அவ்வாறு ஒன்றிலும் சம்பந்தப்படவில்லை. 2007ஆம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப்புலிகளுடைய புலனாய்வில் ஈடுட்டிருக்கும் நெருப்பு என்னும் ஒருவர் எங்களுடைய வீட்டில் இருப்பதாகக் கூறி, புளொட் அமைப்பினைச் சேர்ந்த மூவர் இவ்வீட்டில் இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டனர். அச்சமயம் எனது கணவர் தப்பித்துவிட்டார். அதன் பின்னரே எனது கணவர் வெளிநாட்டிற்குச் சென்றார். காலை ஆகாரத்தை எனது மகள் முடித்த பின்னர் மதிய ஆகாரத்தையும் உண்பதற்கு முயன்றிருக்கின்றார். அச்சமயம் அவ்வுணவு கீழே கொட்டுப்பட்டிருந்தது. அவர் மதிய உணவு சாப்பிடவில்லை என நினைக்கிறேன். 11.00-1.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்திலேயே எனது மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நான் சந்தேகிக்கின்றேன்.
இது இவ்வாறிருக்க சேர்விஸ் கடையின் உரிமையாளரின்(ஜனார்தனின்) மனைவி யிடம் இச்சம்பவம் குறித்து வினவியபோது, 11.00-1.30மணி வரை எனது கணவர் மூன்று சைக்கிள்கைள சேர்விஸ் செய்துகொண்டிருந்தார். இறுதியாக எமது வீட்டிற்கு அண்மித்துள்ள பெண் ஒருவரின் சைக்கிளையே சேர்விஸ் செய்துகொண்டிருந்தார். இச்சமயம் நான் சமைத்துக்கொண்டிருந்தேன். இயந்திரங்களின் இரைச்சல் காரண மாக எந்தவொரு சத்தமும் எனக்குக் கேட்கவில்லை. ஒரு மோட்டார் வாகனம் சேர்விஸ் பண்ணுமிடத்து 1.30மணித்தியாலம் தேவைப்படும். எனது கணவர் 1.30க்கு சாப்பிட வந்ததாகவும் தெரிவித்தார். அதன் பின்னர் சேர்விஸ் செய்துகொடுக்கவில்லை என்றார்.
அவ்வாறாகவிருந்தால் இம்மாணவி கொலை செய்யப்பட்டுவிட்டார் என எவ்வாறு அறிந்தீர்கள்? எனது கண வரே முதலில் என்னிடம் கூறினார். கெங்காவினது மகள் தூக்கின் மூலம் இறந்துவிட்டார் என்றார். நானும் ஏதோ விபத்து என்றுதான் அங்கு போனேன். அப்போது அந்தப்பிள்ளை கட்டிலில் படுக்கவைக்கப்பட்டு இருந்தது. எனது கணவரும் அந்தப் பிள்ளையை பார்த்துவிட்டே சென்றார்.
இது தொடர்பாக ஹரிஷ்ணவியின் சகோ தரன் கூறுகையில், எனக்கு இந்த சேர்விஸ் கடையின் உரிமையாளர் மீதுதான் சந்தேகம். எனது சகோ தரி தொங்கிய நிலையில் இருந்தபோது அடிக்கடி வேலியால் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தார். இவ ருடைய செயற்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரது மனைவியின் தூண்டுதலின் அடிப்படையில் எனது சகோதரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றார்.
அப்படியாயின் காணாமல்போனதாகக் கூறப்படும் மாதினியின் கையடக்கத் தொலைபேசியினை வீட்டின் அலுமாரியில் இருந்தநிலையில் தேடிக்கொடுத்த பொலிஸாரின் மோப்ப நாய், ஏன் அருகில் இருந்த ரகு எனப்படும் ஜனார்தனின் வீட்டிற்குச் சென்றிருக்கக்கூடாது. அவர் செய்யாவிட்டாலும் அவர் வேறு யாருடைய உதவியுடன் இதனைச் செய்திருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுகின்றது. இங்கே தான் மாறுபட்ட கருத்துக்கள் தோற்றுவிக்கப்படுகின்றது.
ரகு கடையில் வேலை செய்துகொண்டிருக்கும் போது அந்தப் பிள்ளையை கொலை செய்திருப்பாராகவிருந்தால் அவரை மோப்ப நாய் காட்டிக்கொடுத்திருக்கும். கையடக்கத் தொலைபேசியினை எடுத்துக்கொடுத்த நாய்க்கு அயல் வீட்டிலிருக்கும் ஜனார்தனை அடையாளங்காட்ட இயலாமல் போனது ஏன்? என்ற சந்கேங்களும் எழுப்பப்படுகின்றன.
இந்த சந்கே நபரான ஜனார்தன் அந்த கிராமத்தில் எப்படியானவர் என வின வியபோது, அவர் நற்பண்புகளைக் கொண்டிருப்பதாகவும், நான்கைந்து வருடங்களாக சிவன் கோயிலில் காலை 05மணிக்கு மணி அடிப்பவர், ஆலயத்தினை சுத்தம் செய்பவர் பின்ன் 06மணியளவில் கடையினை திறப்பவர் எனவும் பிரச்சினைகளுக்கு செல்லாத ஒருவர். பொலிஸில் இவருக்கெதிராக எந்த விதமான முறைப்பாடுகளும் இல்லை எனவும் அவ்வூர் மக்கள் தெரிவித்தனர். அப்படியாயின் கொலையின் சூத்திரதாரி எவ்வாறு வீட்டிற்குள் நுழைந்தார்?
தொடரும்…
– சுழியோடி –