
வவுனியாவில் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட 14 வயது மாணவி ஹரிஸ்ணவியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சந்தேகநபரை இந்த மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (04) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாணவியின் கொலை தொடர்பில் கைதான அயல்வீட்டு குடும்பஸ்தருக்கே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒரு மாதம் கடந்த நிலையிலும் மாணவியின் மரணம் தொடர்பான டிஎன்ஏ, இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகள் இதுவரை நீதிமன்றில் ஒப்படைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.