ஹர்பஜன் கேட்ட கேள்வி? ஆவேசமாக பதில் அளித்த கோஹ்லி

160

625-500-560-350-160-300-053-800-748-160-70-10

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கேட்ட கேள்விக்கு கோஹ்லி ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் அபார பந்து வீச்சால் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் நியூசிலாந்து அணியை இந்திய அணி தன்னுடைய சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்தது.

இத்தொடர் முழுவதுமே இந்திய வீரர் அஸ்வினின் செயல்பாடு இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்தது.

இது குறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளாகவே இந்திய பிட்சுகள் முன் தயாரிக்கப்பட்ட ஸ்பின் பிட்சுகள் போன்றே உள்ளது.

இந்தூரில் நடைபெற்ற பிட்சுகளைப் போன்று தாங்கள் இருந்த தருணங்களில் இருந்திருந்தால் தானும், கும்ளேவும் விக்கெட் எண்ணிக்கையில் எங்கோ போயிருக்கும் என கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த விராட் கோஹ்லி, முதலில் இது போன்ற கேள்விகள் எல்லாம் யார் எழுப்புகிறார்கள் என கூறி ஆவேசமாக பதில் கூறிய அவர், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக பிட்சுகள் இருந்தாலும், பந்தை பவுலர்கள் எவ்வளவு வேகமாக சுழலச் செய்கின்றனர், பின்னர் அது பிட்சில் பட்டு எப்படி திரும்புகிறது என்பதே முக்கியம்.

கடந்த உலகக் கிண்ணம் டி20 போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக நாம் தோல்வி அடைந்தோம். அப்போது நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் தரமானவர்களாகவே தான் இருந்தனர். அதை பற்றி பேசுவதற்கு ஆளில்லை.

அதே சுழற்பந்து வீச்சாளர்கள் தான் தற்போதும் விளையாடினர், ஏன் அவர்களால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை, அப்படிபட்டதுதான் இதுவும், நம் வேகப்பந்து வீச்சாளர்கள் எங்கு சென்றாலும்தான் விக்கெட்டுகளை வீழ்த்துகின்றனர்.

தங்கள் மீது உள்ள திறமைகளை நாங்கள் நம்புகிறோம். எங்களுக்கு ஒருதலைபட்சமாக சாதகமாகும் சூழ்நிலைகளை உருவாக்கி ஆட வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை எனவும் 2 டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களில் முடித்துள்ளோம்.

இதுவே தங்களுக்கு போதும் எனவும், இது தான் எங்களுக்கு பெரிய தன்னம்பிக்கையை அளிக்கிறது என்றும் கோஹ்லி கூறியுள்ளார்.

SHARE