ஹர ஹர மஹாதேவகி என்றதும் இளைஞர்கள் மனதுக்குள் ஒரு விதமான சல்லாபம். சிலருக்கு கதையால் நெருடலாக இருக்கலாம். ஆனால் யூத்கள் மத்தியில் அப்படி ஒரு எதிர்பார்ப்பு.
படத்தை விளம்பரப்படுத்தும் போதே வயது வந்தோர்க்கான படம் மட்டுமே. ஆபாச படமல்ல என்பதை தெளிவாக சொல்லிவிட்டார் இயக்குனர் சந்தோஷ். தற்போது இப்படத்தின் ஹீரோயின் நிக்கி கல்ராணி பேட்டியளித்துள்ளார்.
குடும்பத்தினரிடம் பேசமுடியாத விசயங்களை நண்பர்களிடம் மட்டுமே பேச முடியம். நான்கு நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் என்ன செய்வார்களோ அது தான் இப்படத்தில் இருக்கும் விஷயம். இதன் கதையை சொன்னது என் அப்பா கார்த்திக் (நவரச நாயகன்) விழுந்த விழுந்து சிரித்தார் என கௌதம் சிரிப்புடன் கூறியுள்ளார்.
என்னை தவறாக சித்தரிக்கும் படத்தில் எப்போதும் நடிக்கமாட்டேன். அதுபோன்ற காட்சிகள் ஏதும் இப்படத்தில் இல்லை என நிக்கி கூறியுள்ளார். ஆடியன்ஸை பொருத்தவரை இது படமா அல்லது பஜனையா என நாளை தெரிந்துவிடும்.