ஹாட் சாக்லேட் செய்வது எப்படி

221
வீட்டிலேயே செய்யலாம் ஹாட் சாக்லேட்

தேவையான பொருட்கள் :

பால் – 1 கப்
கோகோ பவுடர் – 1 டீஸ்பூன்
இலவங்கப்பட்டை பவுடர் – 1/4 டீஸ்பூன்
சர்க்கரை – சுவைக்கேற்ப
உருகிய சாக்லேட்  – 2 டீஸ்பூன்

துருவிய சாக்லேட் – 1 டீஸ்பூன்

செய்முறை :

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து குறைவான தீயில் பால் ஊற்றி சர்க்கரை போட்டு கரையும் வரை கிளறி விடவும்.

ஒரு கிளாஸில் கோகோ, உருகிய சாக்லேட் சேர்த்து நன்கு கலக்கவும்.

1 டீஸ்பூன் சூடான பாலை சாக்லேட்டில் கலந்து நன்கு ஸ்மூத்தாக கலந்து விடவும். அதன் மேலாக நுரை வர பாலை காய்ச்சி அதில் ஊற்ற வேண்டும்.

இறுதியாக, இலவங்கப்பட்டை பவுடர், துருவிய சாக்லேட் போட்டு சூடான ஹாட் சாக்லேட்டை பரிமாறவும்..

சூடான ஹாட் சாக்லேட் ரெடி

SHARE