ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மகள் வில்லோவை விரைவில் திரையில் எதிர்பார்க்கலாம்.

265

 

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மகள் வில்லோவை விரைவில் திரையில் எதிர்பார்க்கலாம். அதற்கு முத்தாய்ப்பாக அவர், மாடலிங் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.

103931132-willow-smith-2

ஹாலிவுட்டில் தனக்கென தனி இடம்பிடித்தவர் நடிகர் வில் ஸ்மித். இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவரின் மகன் ஜேடன் ஸ்மித், கராத்தே கிட் படத்தில் ஜாக்கிசானுடன் நடித்து உலக புகழ் பெற்றார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது 14 வயது ஆன மகள் வில்லோவையும் விரைவில் ஹாலிவுட் படங்களில் எதிர்பார்க்கலாம். சினிமா திரைக்கு வழிகோலும் மாடலிங் துறையில் கால்பதித்துள்ளார் வில்ஸ்மித் இன் மகள் வில்லோ.

தி சொசைட்டி மேனேஜ்மெண்ட் என்ற பிரபல மாடல் ஏஜென்சி இவரை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த தகவலை ஒரு பத்திரிகை அட்டைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் அந்த ஏஜென்சி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாடலிங் துறையில் வில்லோ நுழைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அடுத்த சில ஆண்டுகளில் அவர் திரையில் நட்சத்திரமாக ஜொ லிப்பார் என்று நம்பலாம்.

SHARE