ஹிக்கடுவையில் துப்பாக்கிச்சூடு: இராணுவத்தில் பணியாற்றியவர் உயிரிழப்பு

154

ஹிக்கடுவையில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹிக்கடுவை – நாரிகம ஹோட்டல் ஒன்றின் அருகே இந்தத் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதுடன், இதில் 31 வயதான சமிந்த குமார என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் இராணுவத்தில் சிப்பாயாக பணியாற்றியிருப்பதுடன், 2008ஆம் ஆண்டு தொடக்கம் இராணுவத்திலிருந்து தப்பி தலைமறைவாக வாழ்ந்து வந்தமையும் தெரிய வந்துள்ளது.

அத்துடன் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கானவர் இரண்டு துப்பாக்கிகள் வைத்திருந்தமை பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற 3 படுகொலை சம்பவங்கள் தொடர்பில் உயிரிழந்தவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

SHARE