ஹிருனிகாவை கைது செய்ய ஒரு மாத காலம் காத்திருக்க நேரிட்டது

272
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவை கைது செய்ய ஒரு மாத காலம் காத்திருக்க நேரிட்டது என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் ஹிருனிகாவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி, சட்டத்தை அமுல்படுத்த ஒரு மாதம் காத்திருக்க நேரிட்டுள்ளது.

இரண்டு மணித்தியாலங்களில் கைது செய்திருக்க முடியும் அவ்வாறு செய்யாத காரணத்தினால் நல்லாட்சி அரசாங்கத்திற்கு பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளது.

ஹிருனிகாவின் செயற்பாடுகளினால் பொதுமக்கள் மத்தியில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது.

ஹிருனிகா எனது நல்ல நண்பி. மரண தண்டனை அமுல்படுத்துவது குறித்து நாடாளுமன்றில் நாம் இருவரும் இணைந்து குரல் கொடுத்தோம்.

எவ்வளவு நட்பு இருந்தாலும் அவர் குற்றம் இழைத்திருந்தால் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

ஹிருனிகாவை விடவும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தை நேசிக்கின்றேன்.

ஹிருனிகா பிழை செய்திருந்தால் அதற்கான தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

உயிர்த் தியாகம் செய்து உருவாக்கிய இந்த அரசாங்கத்தை அழிக்க இடமளிக்க முடியாது.

ஹிருனிகா போன்ற அனுபவம் குறைந்த அரசியல்வாதிகள் இவ்வாறு நடந்து கொள்வது பிழையானது.

இது பிழையான முன்னுதாரணமாக அமையக் கூடும் என ரஞ்சன் ராமநாயக்க சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

ஹிருனிகா கைது செய்யப்பட்டமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

SHARE