தெமட்டகொட பிரதேசத்தில் ஒருவரை கடத்திச் சென்று தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவுக்கும் தொடர்புள்ளதா? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் பிரசன்னமான சந்தேக நபர்கள் இன்று புதுக்கடை இலக்கம் 2 நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
குறித்த இளைஞர் கடத்தப்பட்ட டிபென்னடர் ரக வாகனமானது நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திரவுடையது என தற்போதைய நிலையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஹிருனிக்கா பிரேமசந்திரவின் மெய்ப்பாதுகாவலர்களே தம்மை கடத்தியதாக கடத்தப்பட்டவரும் தெரிவித்துள்ளார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர தம்மை அச்சுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்பு கொண்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 6 பேர் குறித்த டிப்பன்டர் ரக வாகனத்துடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் நேற்று மாலை சரணடைந்தனர்.
ஹிருனிக்காவின் டிபன்டரில் கடத்திய 6 பேருக்கும் சிறைத்தண்டனை.
கொழும்பு, தெமட்டகொடை பிரதேச வர்த்தக நிறுவனமொன்றில் பணியாற்றும் இளைஞரொருவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று கொழும்பு, புதுக்கடை மாஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அறுவரையும் எதிர்வரும் நான்காம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கும்படி மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டார்.
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களுக்கு அடுத்த கைதிகள் மற்றும் சந்தேகநபர்களுக்கு அளிக்கப்படாத சலுகைகள் இங்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இவர்கள் வந்த வாகனம் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயெ செல்வதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அடையாள அணிவகுப்பில் ஈடுபடுத்தப்படும் பொருட்டு இவர்கள் இங்கு முகங்களை மூடி அழைத்து வரப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஹிருணிகாவின் டிபெண்டர் வாகனமும் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹிருணிகா பிரேமசந்திர தமக்கு தனிப்பட்ட ரீதியில் அச்சுறுத்தல் விடுத்ததாக கடத்தப்பட்ட இளைஞர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
தாம் சுமார் 6 பேர் கொண்ட குழுவினால் லான்ட்ரோவர் வாகனம் ஒன்றில் பலாத்காரமாக கொண்டு செல்லப்பட்டு, பின்னர் தாக்கப்பட்டதாகவும் குறித்த இளைஞர் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்
இதன்போது அவரின் முகம் மற்றும் உடலில் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டுமன்றி, கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட பின்னர் ஹிருணிகா பிரேமசந்திரவினால் தான் தனிப்பட்ட ரீதியில் அச்சுறுத்தப்பட்டதாக தாக்குதலுக்குள்ளான இளைஞர் தெரிவித்துள்ளார்.