அமெரிக்க தேர்தல் நடந்து முடிந்து இரண்டு வாரங்கள் ஆன நிலையில், குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், Wisconsin, Michigan, மற்றும் Pennsylvania ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு பொய்த்து போனது.
ஆனால், அமெரிக்காவின் பிரபல கணினி துறை பேராசிரியர் அலெக்ஸ் ஹால்டர்மென் என்பவர் இந்த மூன்று மாகாணங்களில் வைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டுருக்கலாம் என பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
இத்தகவல்களை தொடர்ந்து கிரீன் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ஜில் ஸ்டெய்ன் என்பவர் விஸ்கோன்சின் மாகாணத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளார்.
இந்த கோரிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையமும் உறுதி செய்துள்ளது.
எனினும், விஸ்கோன்சின் மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கப்பட்டாலும், ஹிலாரி கிளிண்டன் ஜனாதிபதியாக முடியாது.
விஸ்கோன்சின் மாகாணத்தை தொடர்ந்து Michigan, மற்றும் Pennsylvania ஆகிய 3 மாகாணங்களில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு இந்த 3 மாகாணங்களிலும் ஹிலாரி வெற்றி பெற்றால் அவர் ஜனாதிபதியாக வாய்ப்புள்ளது.
விஸ்கோன்சின் மாகாணத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்ற ஜில் ஸ்டெய்னின் கோரிக்கையை தொடர்ந்து Michigan, மற்றும் Pennsylvania ஆகிய இரு மாகாணங்களிலும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என அவர் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜில் ஸ்டெயினின் மனுவை ஏற்ற தேர்தல் ஆணையம் விஸ்கோன்சின் மாகாணத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.