ஹிலாரி செல்லும் இடங்களில் ஊழலும், பேரழிவுமே பின் தொடரும்: டொனால்டு டிரம்ப்

256

ஜன நாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் ஹிலாரி கிளிண்டன் ஆற்றிய உரையை விமர்சித்து டொனால்டு டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் சாடியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8-ம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து குடியரசு கட்சியின் சார்பில் டொனால்டு டிரம்பும், ஜன நாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டனும் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பிலடெல்பியாவில் செவ்வாய்க்கிழமை ஜன நாயக கட்சியின் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஹிலாரி கிளிண்டன் ஆற்றிய உரையில் எல்லைகளற்ற உலகம் அமையவும் மற்றும் பாதுகாப்பான சூழல், வேலைவாய்ப்புகள் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் கிடைக்க செய்வதே என்னுடைய இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ஹிலாரி ஆற்றிய உறையை விமர்சிக்கும் வகையில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ஹிலாரி ஆற்றிய உரையிலிருந்து அவர் தீவிர இஸ்லாமியத்தை ஆதரிப்பது தெளிவாக தெரிகிறது.

இதனால் அமெரிக்காவில் அகதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். ஹிலாரியால் அமெரிக்காவை வழி நடத்த முடியாது என்பதற்கு இந்த சான்று ஒன்றே போதும்.

மேலும் ஹிலாரி செல்லும் இடங்களில் எல்லாம் ஊழலும், பேரிழவும்தான் பின் தொடரும். தவறான முடிவுகள் எடுப்பதில் ஹிலாரிக்கு நிகர் ஹிலாரியே” என்று ட்வீட் செய்துள்ளார்.

SHARE