ஹிலாரி தோல்விக்கு காரணம் சீனா

185

ஹிலாரி கிளிண்டனின் ஜனநாயக கட்சி இணையதளத்தை சீனா ஹேக் செய்திருக்கலாம் என்ற பரபரப்பு கருத்தை டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் கடந்த வருடம் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரியும் களமிறங்கினார்கள்.

தேர்தல் நடைபெறும் நேரத்தில் ஜனநாயகக் கட்சியின் இணையதளம் மற்றும் ஹிலாரியின் இ-மெயில் ஹேக் செய்யப்பட்டு பல தகவல்கள் வெளியிடப்பட்டன.

பின்னர் தேர்தலில் டிரம்பிடம் ஹிலாரி தோல்வியடைந்தார். இணையதள தகவல்கள் வெளியானதால் தான் தனக்கு தோல்வி ஏற்பட்டதாக ஹிலாரி குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், இது குறித்து தற்போது பேட்டியளித்துள்ள டிரம்ப், சீனா இந்த ஹேக்கிங்கில் ஈடுபட்டிருக்கலாம்.

வேறு யாராவது கூட இதை செய்திருக்கலாம். ஆனால் யார் இதை செய்தார்கள் என குறிப்பிட்டு சொல்ல முடியாது என கூறியுள்ளார்.

SHARE