ஹீரோயின்னை கடித்து குதறிய நாய்! ஆபத்தில் நடிகை!

215

பிரபல கன்னட நடிகையான பருல் யாதவை தெரு நாய்கள் கொடூரமாக கடித்து குதறியதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பருல் யாதவ் மும்பையில் ஜோஸ்வரி பகுதியில் ஒரு குடியிருப்பில் வசித்து வருகிறார்.

பிருத்விராஜின் கிருத்யம் என்ற படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் பருல் யாதவ். இவர் கடந்த திங்கட்கிழமை தன்னுடைய நாயை கூட்டிக்கொண்டு வெளியில் சென்றுள்ளார்.

அப்போது தெருவில் கூட்டமாக இருந்த நாய்கள் பருல் யாதவை கொடூரமாக கடித்திருக்கிறது.

தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தலை காயத்திற்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

SHARE