அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஹெரோயினுடன் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று(11) மாலை பிராந்திய மோசடி குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறித்த பொலிஸ் குழுவினர் குறித்த சந்தேக நபரை அக்கரைப்பற்று பதுர் நகர்ப் பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். ஆறுபேர் கொண்ட இப்பொலிஸ் குழுவினரே இவரை கைது செய்து அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை கைது செய்யப்பட்ட அந்நபர் 22 வயதுடைய திருமணமான இளம் குடும்பஸ்தராவார். அந்நபரிடமிருந்து ஒரு தொகை ஹெரோயின் போதை வஸ்த்து கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட குறித்த நபரை நீதி மன்றத்தில் அஜர் செய்வதற்கான நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.