ஹெரோயினுடன் இளைஞர் கைது

141

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை  உடைமையில் மறைத்து வைத்திருத்தார் என்ற குற்றாட்சாட்டில் இளைஞரொருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.அரியாலை பூம்புகார்ப் பகுதிதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞர் ஒருவரின் நடமாமட்டத்தை அவதானித்த பொலிஸார் அவரை மடக்கி சோதனையிட்ட போது  குறித்த இளைளுரது உடைமையில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் 5 கிராம்  ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டது.

இதனையடுத்து இளைஞன் கைது செய்யப்பட்டதுடன், சந்தேக நபர் விற்பனை செய்வதற்கே ஹெரோயின் போதைப் பொருளை  மறைத்து வைத்திருந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த நபரை யாழ்.பொலிஸ் நிலைத்தில் தடுத்துவைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE