
ஹெரோயின் வைத்திருந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே 30 வயதான பாகிஸ்தான் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் 46 ஹெரோயின் உருண்டைகளை வயிற்றில் மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நேற்றைய தினமே நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து எதிர்வரும் 18ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பாகிஸ்தான் பிரஜையின் உடலில் மேலும் ஹெரோயின் மறைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் காணப்படுவதால் வைத்திய பரிசோதனை செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.