நீதிபதியின் தீர்பிற்கு அமைய நபரை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். பதுளை மஜிஸ்ரேட் நீதிபதி நயந்த சமரதுங்கவின் வாசஸ்தலத்தில் அவரது முன்னிலையில் நேற்று மாலை கைது செய்யப்பட்டு ஆஜர் செய்யப்பட்டார்.
அவ்வேளையிலேயே நீதிபதி அந்நபரை 02-01-2019 வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தவிட்டிருந்தார்.
டிஜிட்டல் – தொலைத்தொடர்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு,விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணன்டோவின் ஊடகத்துறை பிரதானியென்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார்.
குறித்த தகவல் பதுளைப் பொலிசாருக்கு கிடைத்ததும் பொலிசார் விரைந்து பதுளை நகரில் வைத்து குறிப்பிட்ட நபரைக் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரை பரிசோதனை செய்கையில் விற்பனைக்கு தயாராக வைத்திருந்த ஐம்பது மில்லி கிராம் எடையுள்ள ஹெரோயின் போதை பொருள் பக்கட்டுக்களும் அவரிடமிருந்து மீட்கப்பட்டன.
அவ்வேளையிலும் அவர் தப்புவதற்கு அமைச்சர் ஹரின் பெர்ணந்துவின் ஊடகப் பிரதானியென்று அடிக்கடி கூறியதாக பொலிசார் தெரிவித்தனர்.
பதுளைப் பொலிசார் குறிப்பிட்ட நபர் அமைச்சரின் ஊடகத்துறை பிரதானியாவென்று அமைச்சரின் செயற்பாட்டு அலுவலகத்தினரிடம் வினவிய போது அத்தகைய ஒருவர் அமைச்சரின் ஊடகப் பிரதானி அல்லவென்றும் அப்படி ஒருவரைப் பற்றி தமக்குத் தெரியாது என்றும் தெரிவித்ததாக பொலிசார் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.