ஹைட்பார்க் கூட்டத்தில் கலந்து கொள்ள சுதந்திரக் கட்சியினருக்கு அனுமதியில்லை: துமிந்த திஸாநாயக்க

621

கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த தீர்மானம் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச உட்பட அனைவருக்கும் பொருந்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அம்பலம் அல்ல. கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக சென்று, கட்சியின் யாப்பை மீறி செயற்படும் எவராக இருந்தாலும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கட்சி தயாராக உள்ளது.

கட்சியின் தீர்மானங்களுக்கு சவால் விடுத்து, ஊடகங்களுக்கு முன்னால் வீரர்களாக மாற எவராவது நடவடிக்கை எடுத்தால்,கட்சியின் யாப்புக்கு அமைய அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அம்பலம் அல்ல. கட்சிக்கு என்று ஒரு கட்டுப்பாடு இருக்கின்றது.

new_dn06-720x480

அதேவேளை ஹைட்பார்க் கூட்டத்தில் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பது குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அமைச்சர் துமிந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.

SHARE