ஹொரவபொத்தானை பெண் கொலை! சந்தேகநபரான கணவர் கைது..!!

278

epdpnewsEvening-Tamil-News-Paper_18825930357_1650413

ஹொரவபொத்தானை பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரியின் மகள் கொலை செய்யப்பட்டசம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கலென்பிந்துனுவௌவ, துடுவௌ பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடையதாகசந்தேகிக்கப்படும் உயிரிழந்த பெண்ணின் கணவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர்.

20 வயதுடைய சந்தேகநபரை கெப்பித்திகொல்லாவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தகராறு காரணமாக,சந்தேகநபர் தனது 20 வயதான மனைவியை நேற்று அதிகாலை கூரான ஆயுதமொன்றினால் குத்தி கொலை செய்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயும் சம்பவத்தில் காயமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அவசர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE