ஹோட்டல் அறையில் வெளிநாட்டு பெண்ணின் சடலம்

343

அளுத்கம, மொரகொல்லயிலுள்ள சுற்றுலாவிடுதி அறையிலிருந்து சுற்றுலாப்பயணியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் பல்கேரிய நாட்டைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் சுற்றுலாப்பயணி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் ஆயுள்வேத மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் பொருட்டே இலங்கைக்கு வந்துள்ளார் எனவும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி தனது நாட்டுக்கு பணிக்க திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சுற்றுலாப்பயணி தங்கியிருந்த அறை நீண்ட நேரம் திறக்காத நிலையில், ஹோட்டல் முகாமையாளரால் பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்டு அறைக் கதவு திறக்கப்பட்ட போது, சுற்றுலாப் பயணி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பெண் சுற்றுலாப் பணியின் சடலம் குறித்த பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

dath

SHARE