ஹோமகமவை பிறப்பிடமாகவும் வவுனியா இறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சீ.சொலமன் (சொலமன் கார்த்திக் றேடர்ஸ் உரிமையாளர்) 27.09.2015 புதன் கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சீனிவாசகம், நேசம் தம்பதியினரின் அன்புமிகு மகனும், காலஞ்சென்ற பொன்னையா மற்றும் வள்ளியம்மாவின் பாசமிகு மருமகனும், நந்தராணியின் அன்புக் கணவரும், மஞ்சு, கார்த்திக், அஞ்சு ஆகியோரின் ஆருயிர் தந்தையும், நிரோவின் பாசமிகு மாமனாரும், நெல்விடாவின் அன்புக்குரிய பேரனும் ஆவார்.
அன்னாரின் அடக்க ஆராதனை 30.09.2015 அன்று காலை 10.00 மணிக்கு இறம்பைக்குளத்திலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று இறம்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதனை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.