கிளிநொச்சி மாவட்ட கண்டாவளை கிராமத்து மக்களை 21-01-2016 வியாழன் மாலை 6:30 மணியளவில் கண்டாவளை மகா வித்தியாலயத்தில் சந்தித்த வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள், கடந்த ஆண்டு வீதி அபிவிருத்தி திணைக்களம் மூலம் கண்டாவளை பிரதான வீதி தார் இடுவதற்காக ரூபாய் 4 மில்லியன் நிதியை ஒதுக்கியிருந்தமை அனைவரும் அறிந்ததே, அதன் அடிப்படையில் சுமார் 1200 மீட்டர் வீதி தார் இடப்பட்டு நிறைவடைந்துள்ளதையும் பார்வையிட்டதோடு, அந்த வீதிக்கு இந்த ஆண்டு 5.5 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் எனவே இதன் மூலம் மேலும் கூடுதலான பகுதி தார் இடமுடியும் எனவும் அமைச்சர் டெனிஸ்வரன் அங்கு தெரிவித்தார். இவ்வாறு ஒவ்வொரு பகுதிகளாக தமக்கு கிடைக்கும் நிதியை கொண்டு தேவையின் அடிப்படையில் மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை தாம் எதிர்வரும் ஆண்டுகளிலும் நிறைவேர்ரவுள்ளதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.