07 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் ஒருவர் கைது

144

07 வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் 48 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் கொட்டுகச்சிய, தங்கஹவல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வயலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது குறித்த சிறுமி வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருப்பதை கண்டு சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து சிறுமி பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சந்தேகநபர் இன்று புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

SHARE