1 பந்து 4 ரன் 1 விக்கெட் 

330
ரைசிங் சன் பிலிம் சார்பில் எச்.என்.கவுடா தயாரித்துள்ள படம், ‘1 பந்து 4 ரன் 1 விக்கெட்’. வினய் கிருஷ்ணா, ஹாசிகா தத், ஸ்ரீமன், ஜீவா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, கார்த்திக் நல்லமுத்து. இசை, உமேஷ். இப்படம் குறித்து இயக்குனர் வீரா கூறியதாவது: நள்ளிரவில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடக்கும் இறுதி கிரிக்கெட் போட்டியின் நேரடி ஒளிபரப்பை நண்பர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.கடைசி பந்து வீச தயாராகிறார் வீரர். இந்தியாவின் வெற்றிக்கு 4 ரன்கள் வேண்டும் என்ற பரபரப்பு விளையாட்டில் தெரிகிறது.

 

அப்போது திடீர் சம்பவம் ஒன்று நடக்கிறது. கிரிக்கெட் தொடர்புடைய அந்த சம்பவம் எது என்பது சஸ்பென்ஸ். இது கிரிக்கெட் பற்றிய படமல்ல. ஆனால், கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் இடம்பெறுகிறது. யாருக்கும் தீங்கு செய்யாத பேய் பற்றிய படம். ஒரு பேய்க்கு கிரிக்கெட் சம்பந்தப்பட்ட சில ஆசைகள் இருக்கின்றன. அதை நிறைவேற்றிக்கொள்ள ஹீரோ உட்பட பலபேரை பயன்படுத்திக் கொள்கிறது. காமெடி கலந்த திகில் படமாக உருவாகியுள்ளது.

 

SHARE