அரிசி ஊறவைத்த நீரில் விட்டமின்கள் மற்றும் மினரல் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளதால், இது தலைமுடி மற்றும் சரும பராமரிப்பிற்கு நல்ல தீர்வாக பயன்படுகிறது.
அரிசி ஊறவைத்த நீரை பயன்படுத்துவது எப்படி?
- 1 கப் அரிசியை குளிர்ந்த நீரில் 20 நிமிடங்கள் ஊறவைத்து, 3 நிமிடங்கள் அதை விரல்களால் கழுவி அந்த நீரை வடிகட்டி தாகம் எடுக்கும் போதெல்லாம் குடிக்க வேண்டும் இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சருமம் பொலிவாகும்.
- ஊறவைத்த அரிசியை கொதிக்கும் நீரில் போட்டு, அந்த அரிசி நன்கு வெந்ததும் அதை வடித்து, அந்த கஞ்சியை முடியின் வேர்க் கால்களில் தடவி நன்கு மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் கூந்தலின் வளர்ச்சி அதிகரிக்கும்.
- அரிசி ஊறவைத்த நீரில் ஒரு பஞ்சு அல்லது வெள்ளைத் துணியைக் கொண்டு நனைத்து அதை முகத்தில் தடவி, முகம் கழுவி வந்தால், முகப்பருக்கள் வருவதை தடுக்கலாம்.
- அரிசியை சிறிது கரகரப்புடன் அரைத்து, அதை வாரம் ஒருமுறை முகம், கை மற்றும் கால்களில் வட்ட வடிவில் தேய்த்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கும்.
- அரிசி வேகவைத்த கஞ்சியில் சிறிது உப்பு கலந்து தினமும் சாப்பிடுவதற்கு முன் குடித்து வந்தால், பசி மற்றும்