1 கோடி சம்பளம் கேட்ட நடிகை

177

தெலுங்கு திரையுலகின் முன்னனி நடிகர்களில் ஒருவர் தான் பாலா கிருஷ்ணா. அண்மையில் கூட கே.எஸ். ரவி குமார் இயக்கத்தில் ரூலர் என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் அடுத்து நடிக்கவிருக்கும் படத்திற்காக பட குழுவினர் கதாநாயகியை தேடி வருகிறார்கள். அதில் ஹிந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவை கதாநாயகியாக கேட்டுள்ளார்கள். இதற்கு வயதான நடிகரோடு நான் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டாராம் சோனாக்ஷி. மேலும் பல நடிகைகளிடம் கேட்டும் அனைவரும் மறுத்து விட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது நடிகை கேத்ரின் தெரசாவிடம் கேட்டுள்ளதாகவும் இதற்கு கேத்ரின் இப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால் எனக்கு ஒரு கோடி சம்பளம் என்று கேட்டுள்ளாராம் என்று டோலிவுட் வட்டாராம் தெரிவிக்கின்றனர்.

SHARE