பேக்கரிகளில் தயாரிக்கப்படும் உணவுகளான கேக், மஃப்பின், பிரெட் ஆகியவற்றினை மெதுவானதாக மாற்றுவதற்காக பேக்கிங் சோடா சேர்க்கப்படுகிறது.
இந்த பேக்கிங் சோடாவினை ஒரு டம்ளரில் கலந்து குடிப்பதால் உடலுக்கு நன்மையினை தருகிறது. பேக்கிங் சோடாவினை தண்ணீரில் கலந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் சில.
- பேக்கிங் சோடாவில் ஆன்டி ஆசிட் உள்ளது. இதனை தண்ணீரில் கலந்து அருந்தும்போது இதில் உண்டாகும் குமிழிகள் வாயு தொல்லையினை சரிசெய்து, வயிறு வீக்கம் போன்றவற்றினை குணப்படுத்தும்.
- பேக்கிங் சோடாவினை சிறிதளவு இளம்சூடான நீரில் கலந்து குடிப்பதால் தொண்டைவலியினை குறைக்கிறது.
- சிறிது நீரில் கலந்து குடிப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கிறது.
- பேக்கிங் சோடா கலவையினை குடிப்பதால் கீல்வாதம் உண்டாகிறது.
- பூச்சி கடிப்பதால் உண்டாகும் தொற்றினை சரிபடுத்துவதற்காக பேக்கிங் சோடா கலந்த நீரினை தேய்ப்பதால் இதனை சரிபடுத்தலாம்.
- பேக்கிங் சோடாவினை தண்ணீர் கலந்து பஞ்சினை உபயோகித்து வாசனை திரவியமாக பயன்படுத்தலாம். மேலும், கைகளை கழுவுவதற்காகவும் பயன்படுத்தலாம். இது கைகளில் உள்ள அழுக்கினை நீக்குவது மட்டுமல்லாமல் நல்ல மணத்தினையும் தருகிறது.